Thursday, October 18, 2012

சனி கிரகம் - பயோடேட்டா

  சனி கிரகம் - பயோடேட்டா



நிறம் - கருப்பு
குணம் - குரூரம்
மலர் - கருங்குவளை
ரத்தினம் - நீலம்
கிரக லிங்கம் - அலி
வடிவம் - நெடியர்
பாஷை - அன்னிய பாஷை
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - 2 1/2 வருஷம்
வஸ்திரம் - கருப்பு பட்டு
க்ஷேத்திரம் - திருநள்ளாறு, திருக்குளந்தை(பெருங்குளம்), சனிசிக்னாபூர், தனி விநாயகர் மற்றும் ஆஞ்சநேய ஸ்வாமி கோவில்கள்
ஆசனம் - வில் அம்பு
ஸமித்து (ஹோமக் குச்சி) - வன்னி
நைவேத்தியம் -  எள்ளு சாதம் (இனிப்பு அல்லது காரம்)
தேவதை - ம்ருத்யு, சிலர் எமன் என்பர்
ப்ரத்யதி தேவதை - திருமுக்தி, பிரஜாபதி
திசை - மேற்கு
வாகனம் - காக்கை சிலர் கழுகையும் சொல்கின்றனர்.
தானியம் - எள்
வஸ்து - எண்ணைய் அதிலும் நல்லெண்ணெய்
உலோகம் - இரும்பு
கிழமை - சனிக்கிழமை
பிணி - வாதம்
சுவை  - கைப்பு(கவனித்துக் கொள்க - பின்னால் விளக்கப்படும்)
நட்பு கிரகங்கள் - புதன், தேய்பிறை சந்திரன், சுக்கிரன்(கவனித்துக் கொள்க - பின்னால் விளக்கப்படும்)
பகை கிரகங்கள் - சூரியன், வளர்பிறை சந்திரன், செவ்வாய்
சம கிரகங்கள் - குரு (வியாழன்)
காரகம் - ஆயுள்
தேக உறுப்பு - தொடையிலிருந்து கால்கள் வரை
நக்ஷத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி
திசை வருடம் - 19 ஆண்டுகள்
மனைவி - நீளாதேவி
உபகிரகம் - மாந்தி



தோத்திரங்கள்

சனி த்யான ஸ்லோகம்

நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸநைச்சரம்!

காயத்ரி

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ மந்த ப்ரசோதயாத்.!
 

தமிழ் துதி

சங்கடம் தீர்க்கும் சனிபகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வர தேவே இச்சகம் வாழ இன்னருள் தா! தா!


No comments:

Post a Comment